மட்டக்களப்பு பற்றி .....

 மட்டக்களப்பு இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கியநகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்குமாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின்தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்புமாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது"மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப் படுகின்றது. இதன் எல்லைகளாகதிருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன.இலங்கையின் கிழ்க்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக்கொண்டமைந்த கிழ்க்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்தநிலப்பரப்பாகும். இது சராசரியாக கடல் மட்டத்தயுலிருந்து 5 மீட்டர்உயரமுடையதகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில்கடல் நீரானது நிலப்பரப்பின் பெரும்பாலன பகுதிகளுக்கூடாக செல்வதுடன் பிரதானநிலப்பரப்பிலிருந்து சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் கொண்டமைந்தஅழகிய கடநீரேரி அமைந்துள்ள்மையாகும். இக் கடநீரேரி நகரின் வடக்காகவுள்ளவெருகல் வரை 73.5 கி.மீ வரையிலும் தெற்காகவுள்ள துறைநீலாவணை வரை 35.2 கி.மீ வரையிலும் பரந்துள்ளது.கடநீரேரிக்கு குறுக்காக சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும்வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழஅகுசேர்க்கிறது.மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள்மிகப்பெரிய தீவாகும்.கோட்டமுனை நிலப்பரப்பை கல்லடியுடன் இணைக்கும்கள்ளடிப்பாலமானது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.லேடி மன்னிங் பாலம் எனஅழைக்கப்படும் இப்பலாம் அமைநத்துள்ள கடற்பரப்பானது மட்டக்களப்புக்குதனித்துவமான பாடும் மீன்கள் எனப்படும் ஒருவகை மீன்களின்இருப்பிடமாகும்.முழுமதி தினங்களில் இம்மீன்கள் எழுப்பும் ஒலியானதுஇசையினில் மெட்டமைத்த பாடல் போன்று இருந்த காரணத்தால் இப்பெயர்வழங்கலாயி்ற்று.மட்டக்களப்பானது இயற்கை எழில் கொண்ட கடற்கரைகளை கொண்டுள்ளது.பாசிக்குடாமற்றும் கல்குடா கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை .பாசிக்குடா கடற்கரைமட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்த்ததும் நீந்துபவர்களுக்குமிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களைகவரும் ரம்யமான அமைப்புடையதாகும்.மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும்வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டதாக காணப்படுகிறது.மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை செல்சியஸ் அளவுடையவெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பெர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதிகூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில்சராசரியாக 15 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடையமழைவீழ்ச்சியும் காணப்படுகிறது.
Copyright (c) 2009 Batti.com. All rights reserved

This A Entertainment Website ..